Published : 05,May 2022 08:36 AM
திருப்பூர்: பனியன் நிறுவன தொழிலாளி குத்திக் கொலை பல்லடம் போலீசார் தீவிர விசாரணை

பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (37). கொடைக்கானலை சேர்ந்த இவர், தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார். இந்நிலையில், சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியை முடிந்து விட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரை கத்தியால் சரமாரியமாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்னர். இதில், கோபால் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து; தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.