Published : 08,Sep 2017 09:02 AM

நீட் விலக்கு கோரி ஆண்டாள் கோவில் கோபுரம் மீது ஏறிப் போராட்டம்

NEET-protest-at-Virudhunagar-Aandal-Temple

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் இ‌ந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடங்களாக கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்‌டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்