நீட் தேர்வுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஈராக்கிலும் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஈராக்கிலும் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஈராக்கிலும் போராட்டம்

அனிதா மரணத்திற்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, ஈராக்கிலும் போராட்டம் நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் நீட் தேர்விற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், நீட் தேவையில்லை என்றும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈராக் நாட்டுத் தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கில் உள்ள திருவாரூரைச் சேர்ந்த ராஜ் என்பவர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ஈராக்கில் வாழும் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலும் போராட்டம் நடைபெறுவது நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com