Published : 08,Sep 2017 08:06 AM

உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஆசிரியை சபரிமாலா

teacher-sabari-mala-started-Fasting-Protest

நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு பின் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியையான சபரிமாலாவும் தனது 7 வயது மகனுடன் போராடி வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சபரிமாலா தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஜக்காம்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் சபரிமாலா உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சபரிமாலாவை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சபரிமாலா தனக்கு தேசமே முக்கியம் என்றும் வேலை அல்ல என்றும் கூறி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்