[X] Close

திருவள்ளூரில் விஸ்வரூபம் எடுத்தது டெங்கு: 11 பேர் பாதிப்பு

Thiruvallur-Dengue-Fever

திருவள்ளூரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் ‌பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 790 பேர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 ஆண்கள் உட்பட 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனி பிரிவில் வைத்து தீவி‌ர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி என மொத்தம் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 790 பேரில், 425 பேர் புறநோயாளிகளாகவும் 265 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து திருவள்ளூர், ஈக்காடு, செங்கரை, மணவாள நகர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் குறித்து கண்டறிந்து, சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Related Tags : ThiruvallurDengueFever
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close