[X] Close

அனிதாவின் மரணத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்: திருமாவளவன்

Thirumavalavan-about-anitha-death

அனிதாவின் மரணத்திற்கு வேறு காரணங்கள் உண்டு என சிலர் திசை திருப்ப முயற்சிப்பதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனிதா மரணத்திற்கு நீட் காரணம் இல்லை என்றும், தனிப்பட்ட காரணங்கள் உள்ளது என்றும் சிலர் வதந்தி பரபரப்புவதாக கூறினார். தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இது திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அனிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், அவர் நீட் தேர்விற்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கூறுவது அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என திருமாவளவன் சாடியுள்ளார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close