Published : 01,May 2022 09:53 AM

’செவ்வாய் கிரகத்தில் ஏலியனா!’ - முக்கோண அமைப்பை கண்டு குழம்பி போன நாசா ஆய்வாளர்கள்!

Mars-helicopter-finds-ALIEN-stuff-Check-out-photo-of-this-UFO-shaped-thing

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முக்கோண வடிவில் இருந்த அமைப்பைக் கண்டு வேற்று கிரகவாசிகளாக இருக்குமோ என ஆய்வாளர்களே முதலில் குழம்பிவிட்டனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டது. பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்தது.

image

இதுவரை 25 முறை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்த ஹெலிகாப்டர் 26ஆவது முறையாகச் சமீபத்தில் பயணித்தது. அப்போது அது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முக்கோண வடிவில் அமைப்பு ஒன்றை படம்பிடித்து அனுப்பியது. வெள்ளை நிறத்தில் கூம்பு போன்ற வடிவில் இருந்த அந்த அமைப்பைக் கண்டு வேற்று கிரகவாசிகளாக இருக்குமோ என ஆய்வாளர்களே முதலில் குழம்பிவிட்டனர்.

ஆனால் தீவிர ஆய்வுக்குப் பின்னரே அது இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உதவிய பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் பாகங்கள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

ஏலியன் என்ற ஒன்று இருப்பதாக அறிவியல் பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: பருவநிலை மாற்றம்: அமெரிக்கா கலிஃபோரினியா மாகாணத்தில் கடும் வறட்சி


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்