[X] Close

வேலையை மாற்றிக் கொள்வோமா? ட்ரம்புக்கு அர்னால்ட் கேள்வி

Schwarzenegger-to-Trump-----Why-Don---t-We-Switch-Jobs----

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் கலிஃபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அர்னால்ட் ஸ்வாஸ்நெகருக்கும் இடையேயான சொற்போர் தீவிரமடைந்திருக்கிறது.

ட்ரம்பின் அதிரடியான நிர்வாக உத்தரவுகளை அர்னால்ட் கடுமையாக விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே சொற்போர் தொடங்கியது. அதிபராவதற்கு முன்பு ட்ரம்ப் நடத்தி வந்த அப்ரன்டிஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தற்போது அர்னால்ட் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், தன்னைப் போல இந்த நிகழ்ச்சியை யாராலும் வெற்றி பெற வைக்க முடியாது என்று கூறினார். இதற்குப் பதிலடி கொடுத்த அர்னால்ட், தேவைப்பட்டால் வேலையை பரஸ்பரம் மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். ட்ரம்புக்கு பதில் கூறி, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close