Published : 08,Sep 2017 02:31 AM

தமிழகத்தில் பரவலாக கனமழை: இடி தாக்கி இருவர் உயிரிழப்பு

Two-persons-attacked-by-Thunder

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருவேறு இடங்களில் இடி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வந்தவாசியை அடுத்த வழூர் கிராமத்தில் மாலை 5 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வழூர் நடு ஏரி கரையில் மாடு மேய்த்து கொண்டு இருந்த அனிதா என்பவர் மீது பலத்த சத்தத்துடன் இடி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் வந்தவாசியை அடுத்த மூடூர் கிராமத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் அக்கிராம வயல் வெளியில் மாடு மேய்த்து கொண்டு இருந்த செல்லப்பன் என்கிற முதியவர் பலியானார்.

தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இருவேறு கிராமங்களில் இடி தாக்கி இருவர் உயிர் இழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்