Published : 28,Apr 2022 02:24 PM

சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு - இளைஞர் கைது

Salem-A-Trichy-youth-was-arrested-for-stealing-jewelery-from-women-walking-on-the-road

சேலத்தில் சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அழகு நகர் பகுதியில் கடந்த 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பிரியதர்ஷினி என்பவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அவரது கழுத்தில் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். அடையாளம் தெரியாத இந்த நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

image

இந்நிலையில், தப்பிச் சென்ற நபர்கள் சென்ற சாலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் திருச்சியைச் சேர்ந்த பிராங்க்லின் குமார் என்ற இளைஞரை சேலம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் வந்த நபர் யார் அதே நாளில் திருவகவுண்டனூர் புறவழிச் சாலையில் மேலும் ஒரு நகை பறிப்பு சம்பவம் நடந்தது அதிலும் இந்த நபர் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்