[X] Close

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஜோதிகா

Mani-Ratnam-is-directed-by-Vijay-Sethupathi-and-Jyothika

மணிரத்னம் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

மணிரத்னம் இயக்க உள்ள படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 2018 வரை பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் தேதிகளை பிற படங்களில் இருந்து கேட்டு வாங்கி ஒதுக்கியுள்ளார். அடுத்த மாதம் படபிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஜோதிகாவும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு மீண்டும் வந்தார். தற்போது அவர் நடித்துள்ள மகளிர் மட்டும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோதிகா நடிக்க இருப்பதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close