Published : 28,Apr 2022 08:39 AM

'அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் பெயர் இதுதான்!

Avatar-2-titled-Avatar-The-Way-of-Water

'அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்தின்  பெயர் 'Avatar: The Way of Water என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் பிரமாண்டமான வெற்றியைப் பதிவு செய்த படம் 'அவதார்'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருக்கிறார். உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

image

இந்நிலையில் இப்படத்தின் டீசர் காட்சிகள் 'சினிமாகான் 2022' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. வரும் மே 6-ம் தேதி ‘அவதார் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் 'சினிமாகான் 2022' நிகழ்ச்சியில் ஒளிபரப்பான டீஸரின்படி, 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் பெயர் 'Avatar: The Way of Water என்று தெரியவந்துள்ளது.

முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இப்படமும் உலக சினிமா வரலாற்றில்  சிறந்த உருவாக்கத்திற்கான  சாதனையைப் படைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வெளியாக இருக்கும் ‘அவதார் 2’ கிளிம்ப்ஸ் வீடியோ? - ரிலீஸ் தேதி அறிவிப்பு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்