Published : 07,Sep 2017 03:18 PM

இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை: குடிபோதையில் வெறிச்செயல்

3-youth-killed-their-friend-brutally-at-chennai-chrompet

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகறாரில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரூபன் பாபு என்பவர் தன் மனைவி கௌரி மற்றும் குழந்தையுடன் ஆண்கள் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் கெளரி தனது அம்மா வீட்டிற்கு சென்றபோது, ரூபன்பாபு தனது நண்பர்கள் 4 பேரை அழைத்து வந்து மாடியில் அமர்ந்து மது அருந்திய‌தாக கூறப்படுகிறது. மது அருந்தும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ரூபன் பாபு உள்ளிட்ட மூவர், நான்காவது நபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அருகில் உள்ள சுடுகாட்டில் வீசி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.

மேலும் ரூபன் தன் மனைவி கெளரிக்கு தொடர்பு கொண்டு விடுதிக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கோபி என தெரியவந்துள்ளது. ஆண்கள் விடுதியில் ரூபன் பாபு குடும்‌பத்து‌டன் தங்கியிருந்தது எப்படி என்று, அவரது மனைவி கௌரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரூபனையும், மற்ற இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்