பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அசாம் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இன்று புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ட்வீட் வழக்கில் குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அசாம் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்த நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜிக்னேஷ் மேவானியை கைது செய்ய வந்த அசாமின் பர்பேட்டாவைச் சேர்ந்த போலீசார், அவர் எந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
அசாமின் கோக்ரஜரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து, குஜராத்தின் பலன்பூரில் அசாம் போலீஸ் குழு முதலில் அவரை கைது செய்தது. இது தொடர்பாக பேசிய ஜிக்னேஷ் மேவானி, "இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சதி. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இதை திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். ரோஹித் வெமுலாவுக்குச் செய்தார்கள், சந்திரசேகர் ஆசாத்துக்குச் செய்தார்கள், இப்போது என்னைக் குறிவைக்கிறார்கள்" என்று கூறினார்
41 வயதான ஜிக்னேஷ் மேவானி மீது கிரிமினல் சதி, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான குற்றம், மத உணர்வுகளை தூண்டுதல் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய பாஜக தலைவர் அருப் குமார் டே, "மோடியை பிரதமராகப் பெற்ற நாம் அதிர்ஷ்டசாலிகள், மேவானி பிரதமரின் பெயரை சமீபத்திய வன்முறை சம்பவங்களுடன் இணைக்க முயற்சிக்கிறார். அதற்கு பிரதமர் மோடிதான் காரணமா? கோட்சேவை பிரதமர் மோடியின் கடவுள் என்கிறார், அதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
1995-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பனஸ்கந்தாவின் வட்கம் தொகுதியில் இருந்து சுயேட்சை எம்எல்ஏவாக தேர்வான ஜிக்னேஷ் மேவானி, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகக் கூறியிருந்தார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'