[X] Close

வாழ்நாளில் பெரும்பகுதியை பெரும் கூத்தனாக கழித்த 'சித்தாமூர் முனுசாமி' இயற்கை எய்தினார்

தமிழ்நாடு

புரிசை கூத்து வரலாற்றில் முக்கிய பங்காற்றியவரும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை பெரும் கூத்தனாக கழித்தவருமான சித்தாமூர் முனுசாமி இயற்கை எய்தினார்.

வயதான காலத்திலும் கூத்து ஒன்றே தனது அடையாளம் என இயங்கிய முனுசாமி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சியில் கூத்துக் கலைஞனாக தோன்றி நிகழ்ச்சியின் வீச்சை அதிகரித்தவர்.

நடேச தம்பிரான், கண்ணப்ப தம்பிரான், அங்கு தம்பிரான், மண்ணு முதலியார், வரத கவுண்டர், வேதாசலம் என பெரும் கூத்தர்களோடு பயின்றவர் சித்தாமூர் முனுசாமி. அவர் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close