[X] Close

வடகொரிய அதிபரின் சொத்துக்களை முடக்கக் கோரிக்கை: ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம்

North-Korea-crisis--US-seeks-Kim-Jong-un-asset-freeze

அணு ஆயுதச் சோதனை நடத்திய வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது. 

ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வடகொரிய அதிபருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்கா சார்பில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதிபர் கிம் ஜாங் உன்னின் சொத்துகளை முடக்க வேண்டும் என்பதோடு, எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்டவற்றுக்கு தடைவிதிக்கவும் இந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டிருக்கிறது. வடகொரியா தொழிலாளிகள் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


Advertisement

எனினும் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே வடகொரியாவின் முக்கியத் தலைவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. நிலக்கரி உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close