
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு குறைந்து வருகிறது.
தற்போது 5 வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியானது வெற்றியை தன் வசப்படுத்தியிருந்தால், தற்போது 4 ஆவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, குறைந்த புள்ளிகளையே பெற்றிருக்கும். இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாயிருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாத நிலையில், இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. வெற்றிக் கணக்கை இதுவரை தொடங்காத மும்பை அணி, கடைசி இடத்தில் பரிதாபத்துடன் உள்ளது.
இதையும் படிக்கலாம்: ‘என்னதான் ஆச்சு விராட் கோலிக்கு?' - வருத்தத்தில் ரசிகர்கள்