Published : 07,Sep 2017 08:08 AM

சென்னை தண்டவாளத்தில் விரிசல்: 3 மணி நேரம் தாமதமான ரயில்கள் 

Trains-in-Tirunelveli-in-Chennai--3-hours-late-trains

சென்னை பேசின் பாலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை பேசின் பாலத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடைக்கு செல்லும் ரயில் பாதையில் சிறிய விரிசல் கண்டறியப்பட்டது. அதனால், அந்த பாதையில் வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதன் காரணமாக, காவேரி விரைவு ரயில், சேரன், மங்களூர், ஜோலார்பேட்டை, யஷ்வந்த்பூர், திருவனந்தபுரம், மதுரை - டேராடூன், திருப்பதி கருடாத்திரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் அனைத்தும் 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்