[X] Close

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு: அரியலூரில் தொடர்கிறது போராட்டம்

Students-protest-against-NEET-in-Ariyalur

அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3-ஆவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி, மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கல்லூரியின் நுழைவாயிலில் அமர்ந்தபடி மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே போல் செந்துறையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீட் தேர்வால் கிராமபுற மாணவர்களின் மருத்துவர் கனவு தகர்ந்துவிட்டதாகவும் மறியலில் ஈடுபட்ட மாணவிகள் ஆதங்கப்பட்டனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close