Published : 22,Apr 2022 06:35 PM
”அவளை விட்டு விலகி விடு” - தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததாக இளைஞர் கொடூரமாக கொலை

தஞ்சையில் தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்ததாக இளைஞரை, அம்மாணவியின் அத்தை மகன் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கொலை செய்ததாக சொல்லப்படும் நபரை காவல்துறை தேடிவருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் (வயது 21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவி தங்கை முறை என்பதால் இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் ஆனந்த் தனது காதலை விடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாணவியின் அத்தை மகனான சூரக்கோட்டையை பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 25) இது குறித்து கண்டித்துள்ளார்.
இப்பிரச்சிணை தொடர்பாக நேற்று இரவு வாளமர்கோட்டை கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் நின்று கொண்டிருந்த ஆனந்தை உதயகுமார், “நீ அவளை காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு” என ஆனந்திடம் கூறியதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த உதயகுமார் மண்வெட்டியால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே ஆனந்த் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், தகவலறிந்த தாலுக்க காவல்துறையினர் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய செய்தி: சாலை விபத்தில் 3 வயது குழந்தை பலி - முடிகாணிக்கை கொடுக்க கோயிலுக்கு சென்றபோது பரிதாபம்