'பிளே ஆஃப்' சுற்றை விட்டு வெளியேறியதா மும்பை? 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு என்ன?

'பிளே ஆஃப்' சுற்றை விட்டு வெளியேறியதா மும்பை? 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு என்ன?
'பிளே ஆஃப்' சுற்றை விட்டு வெளியேறியதா மும்பை? 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு என்ன?

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் தோற்றுள்ள மும்பை அணி, ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஏழாவது தோல்வியை சந்தித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த அணியும் பிளேஆஃப் இடத்தை இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு ம் கிட்டத்தட்ட மங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ஐபிஎல் சீசன்களின் முதல் நான்கு மற்றும் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும் பிளேஆஃப்களை எட்டி சாம்பியன் பட்டம் வென்ற வரலாறு மும்பைக்கு உண்டு. ஆனால் தொடர்ச்சியாக முதல் 7 போட்டிகளில் அந்த அணி தோற்பது இதுவே முதல்முறை. இந்த சீசனில் 14 போட்டிகள் விளையாட வேண்டிய மும்பை அணி முதல் பாதியை முழுவதுமாக கோட்டை விட்டிருக்கிறது. இன்னும் ஏழு போட்டிகள் மீதமுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

பொதுவாக் ஐபிஎல் பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 16 புள்ளிகள் அல்லது சிறந்த நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகள் தேவை. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மும்பை விளையாட முடியும் என்பதால் அந்த அணிக்கு 16 புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை. 2வது வாய்ப்பில் அடுத்த அனைத்துப் போட்டிகளையும் மிக அதிக ரன் ரேட்டில் அந்த அணி வெல்ல வேண்டும். ஆனால் தற்போது மைனஸ் 0.892 ரன் ரேட்டுடன் நிலையற்ற ஃபார்மில் சிக்கி தள்ளாடி வரும் அந்த அணியால் 7 தொடர் வெற்றிகளை எவ்வாறு பெற முடியும் என்பது பெரிய கேள்விக்குறி தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com