
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் ஒரு மணி நேரத்தில் 17 பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டியபோது நேர்ந்த விபத்துகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளில் சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர். அதில், 46 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.