[X] Close

வீட்டின் கதவை உடைத்து 300 சவரன், ரூ.11 லட்சம் கொள்ளை

Tambaram-300-Savaran-Gold-Theft

சென்னை தாம்பரத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 300 சவரன் தங்க நகை, 11 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை தாம்பரம் சிடிஓ காலனி பாண்டியன் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியான ராமன், குடும்பத்துடன் நுங்கம்பாக்கதிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடை அவர், வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 300 சவரன் தங்க நகை, 11 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் காவல்துறையினர் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close