ப்ளூவேல் விளையாட்டிற்கு உலகெங்கும் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவையும் இதன் விபரீதம் விட்டுவிக்கவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகி ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற போது மீட்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உலகையே அச்சுறுத்தும் ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகி கடந்த சில தினங்களுக்கு முன் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட அவர் தற்போது மீண்டும் ப்ளூவேல் சேலஞ்ச் மூலம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது ஓரளவிற்கு நலமுடன் இருக்கிறார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், சிறுமி மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதாகவும், ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ப்ளூவேல் விளையாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து நாடெங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் ப்ளூவேல் விளையாட்டிற்கு ஒருவர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!