Published : 07,Sep 2017 02:59 AM
போராட்ட பீதி: மெரினாவில் இரவு முழுவதும் கண்காணிப்பு

சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் இரவு நேரத்தில் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிக்காக மெரினாவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
சென்னை லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, கத்திப்பாரா, கிண்டி உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.