Published : 18,Apr 2022 10:39 AM

உலக பாரம்பரிய தினம் இன்று: இந்தியாவும் சில முக்கியமான இடங்களும் - ஒரு பார்வை

World-Heritage-Day-2022--Take-a-look-at-eight-major-heritage-sites-of-India

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று, நம்மைச் சுற்றியுள்ள கலாச்சார பாரம்பரிய சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பாரம்பரிய தினம் என்பது நமது கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. இந்த நாள் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களின் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. நமது கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வரையறுக்கும் அற்புதமான வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தியாவின் எட்டு  முக்கிய பாரம்பரிய சின்னங்கள் இங்கே:

Ellora and Ajanta caves are surprisingly stupendous

அஜந்தா குகைகள், மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள அஜந்தா குகைகள், புத்த மத சிற்பக் கலையின் தலைசிறந்த படைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 480 வரை செதுக்கப்பட்ட சுமார் 30 குகைக் கோவில்கள், பாறை ஓவியங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இங்கே உள்ளன. இந்த குகைகள் குறித்து இந்தியாவிற்கு வந்த பல்வேறு சீன புத்த பயணிகளின் நினைவுக் குறிப்புகளிலும், 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்பர் கால முகலாய அதிகாரியாலும் வரலாற்றில்  குறிப்பிடப்பட்டுள்ளன.

image

தஞ்சாவூர் பெரிய கோயில், தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயில் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சோழப் பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தமிழர் கட்டிடக்கலையின் அடையாளமாக விளங்கும் இந்த மிக பிரமாண்டமான கோயில் கி.பி 1003 - 1010 வரையிலான ஏழே  ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பது ஆச்சர்யமாகும்.

தமிழின் சிறப்பை விளக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கோயிலில் தமிழின் மெய்யெழுத்துக்களை குறிக்கும் வகையில் 12 அடி உயர சிவலிங்கம், மெய்யெழுத்துக்களை குறிக்கும் வகையில் 18 அடி உயர சிவலிங்க பீடம், உயிர் மெய் எழுத்துக்களை குறிக்கும் 216 அடி உயர கோபுரம், மொத்த எழுத்துக்கள் 247 என்பதை குறிக்கும் சிவலிங்கம் மற்றும் நந்திக்கு இடையிலான தூரம் என பல்வேறு சிறப்புகள் இந்த கோயிலில் அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டு இந்த கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. சோழர்களால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் ஆகியவையும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

Assam's Kaziranga National Park reopens after 7 months | Onmanorama Travel

காசிரங்கா தேசியப் பூங்கா, அஸ்ஸாம்: காசிரங்கா தேசியப் பூங்காவில் மாபெரும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உலகில் உள்ளவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வாழ்கின்றன. காசிரங்கா தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், ராயல் வங்கப் புலி, ஆசிய யானை, காட்டு நீர் எருமை மற்றும் சதுப்பு நில மான் ஆகிய அரியவகை விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. இந்த பூங்காவில் உயரமான யானைப் புல், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழமான வெப்பமண்டல ஈரமான அகன்ற இலைகள் கொண்ட காடுகள் உள்ளன. பிரம்மபுத்திரா உட்பட நான்கு முக்கிய ஆறுகள் மற்றும் பல சிறிய நீர்நிலைகள் இந்த பூங்காவில் ஓடுகின்றன.

Taj Mahal | Definition, Story, Site, History, & Facts | Britannica

தாஜ்மஹால், உத்தரபிரதேசம்: தாஜ்மஹால், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று, முகலாய பேரரசர் ஷாஜகான் 1631 இல் இறந்த தனது மூன்றாவது மனைவி மும்தாஜ் பேகத்தின் நினைவாக இதைக் கட்டினார். இது 1983 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில், வகை i இன் கீழ்  கலாச்சார நினைவுச்சின்னமாக சேர்க்கப்பட்டது.

Konark sun temple to have sound and light programme

கோனார்க் சூரியக் கோயில், ஒடிசா: ஒடிசாவின் கொனார்க்கில் உள்ள 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான சூரியக் கோயில் இதுவாகும். இது வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மகாநதி டெல்டாவில், 24 சக்கரங்களுடன் சூரியனின் தேர் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு குதிரைகளால் இயக்கப்படும் குறியீட்டு கல் சிற்பங்களும் இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.

घूमने के शौकीन हैं तो मध्यप्रदेश का सांची स्तूप देखने जरूर जाएं, यहां की  वास्तुकला आपका मन मोह लेगी | TV9 Bharatvarsh

சாஞ்சி, மத்தியப் பிரதேசம்: சாஞ்சியில் உள்ள இந்த புத்த நினைவுச்சின்னங்கள் கி.மு 200 ஆம் ஆண்டு முதல் கி.மு. 100 ஆம் ஆண்டு வரையிலான புத்த கட்டமைப்புகளின் வரிசையாகும், இவை  மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, யுனெஸ்கோ அமைப்பு இந்த நினைவுச்சின்னங்களின் தனித்துவமான கலாச்சார முக்கியத்துவம் காரணமாக இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.

Mahabodhi Temple Bodh Gaya - The World Heritage Monuments of India

மகாபோதி கோயில், பீகார்: மகாபோதி கோயில் என்பது பீகாரின் புத்தகயாவில் உள்ள ஒரு புத்த கோயிலாகும், இங்கு புத்தர் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த இடமானது போதி மரத்தின் வழித்தோன்றலையும் கொண்டுள்ளது, இந்த மரத்தின் அடியில்தான்  புத்தர் ஞானம் அடைந்தார் என நம்பிக்கை நிலவுகிறது. மேலும் இந்த கோயில் வளாகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மற்றும் புத்த மதத்தவரின் புனித யாத்திரை தலமாக இருந்து வருகிறது.

Champaner-Pavagadh Archaeological Park, History, Timings, Entry Fee

சம்பானேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா, குஜராத்: சம்பானேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா குஜராத்தில் அமைந்துள்ளது. இது 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சாவ்தா வம்சத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆட்சியாளரான வன்ராஜ் சாவ்தாவால் நிறுவப்பட்டது. மசூதிகள், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், கல்லறைகள், கிணறுகள், சுவர்கள் மற்றும் மொட்டை மாடிகள் ஆகியவை சம்பானேர்-பாவாகத்தில் காணப்படும் பதினொரு வகையான மிகச்சிறப்பு வாய்ந்த கட்டமைப்புகளாக உள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்