Published : 06,Sep 2017 04:37 PM
ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறுவாரா?: ஆளுநருடன் டிடிவி நாளை சந்திப்பு

அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாளை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஏற்கனவே தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் டிடிவி தினகரன் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, முதலமைச்சரை மாற்றக்கோருவரா? ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறுவாரா? பெரும்பான்மையை நிரூபிக்கக்கோருவரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. தினகரனுடன் 9 எம்எல்ஏக்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரும் தங்களின் போராட்டத்திற்கு நாளை நல்ல முடிவு கிடைக்கும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அச்சத்தின் காரணமாகவே ஈபிஎஸ்., ஓ.பி.எஸ். அணிகள் இணைந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.