சம்மரில் வெளியே போறீங்களா? இவற்றை கொண்டுசெல்ல மறக்காதீங்க!

சம்மரில் வெளியே போறீங்களா? இவற்றை கொண்டுசெல்ல மறக்காதீங்க!
சம்மரில் வெளியே போறீங்களா? இவற்றை கொண்டுசெல்ல மறக்காதீங்க!

சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்லும்போது மறக்காமல் சில அத்தியாவசியப் பொருட்களை கையில் கொண்டுசெல்வது அவசியம்.

  • தண்ணீர்பாட்டிலை மறக்காமல் கையில் கொண்டுசெல்லுங்கள். அதிகத் தண்ணீர் குடிப்பதோடு நிறுத்திவிடாமல் எப்போதும் நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் அல்லது ஜூஸ் அல்லது மோரை கையில் கொண்டுசெல்லுங்கள். இந்தியாவில் சில கிலோமீட்டர்களில் நீரின் சுவை மாறுபடுகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில்களை கொண்டுசெல்வது அவசியம். குறிப்பாக டூர் மற்றும் ட்ரெக்கிங் செல்லும்போது தண்ணீர் பாட்டில்களை கொண்டுசெல்ல வேண்டும்.
  • சருமம் மற்றும் முடியை பராமரிக்கத் தவறவேண்டாம். எப்போது வெளியே சென்றாலும் சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் லோஷன் தடவவேண்டும். முடிந்தவரை முகத்தில் துணியைக் கட்டிக் கொள்வது வெயில் மட்டுமல்லாமல் அழுக்கு, தூசியில் இருந்தும் பாதுகாக்கும். தலைமுடியை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • நீண்ட நேரம் வெயிலில் அலையவேண்டி இருந்தால் தண்ணீர் மட்டுமல்லாமல் குளுக்கோஸ் ட்ரிங்கையும் வைத்துக்கொள்ளலாம். உடல் தளர்ச்சியடைந்து சோர்வு ஏற்பட்டால் உடலுக்கு இது எனர்ஜி கொடுக்கும்.
  • வெயில்காலத்தில் கண்களில் அதிகப் பிரச்னைகள் வரும். கண் நோய்கள், தொற்று, எரிச்சல் போன்றவை அதிகமாக இருக்கும். எனவே வெளியே செல்லும்போது தொப்பி, கண்ணாடி(sun glass) மற்றும் குடை போன்றவற்றை அதிகம் பயன்படுத்தவேண்டும்.
  • வெயில்காலத்தில் சிலருக்கு முழுமையான தூக்கம் இருக்காது. உடலுக்கு போதுமான உழைப்பு கொடுக்கும்போதுதான் நன்றாக தூக்கம் வரும். மேலும், காபி, டீ, ஆல்கஹால் போன்றவையும் உடலை சீக்கிரத்தில் வறட்சியடைய செய்யும். எனவே அவற்றையும் தவிர்ப்பது சிறந்தது.
  • வெயிலில் செல்லும்போது சுத்தமான தளர்வான காட்டன் ஆடைகளை அணிந்துசெல்லவும். நைலன், பாலிஸ்டர் உடைகளை அணியும்போது வெயிலால் மேலும் எரிச்சலையும் அரிப்பையும் உண்டாக்கும். அதேபோல் சிலருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கும். அவர்கள் கைக்குட்டைகளை மறக்காமல் கொண்டுசெல்ல வேண்டும். 
  • எங்கு சென்றாலும் சானிடைசரை வைத்துக்கொள்ளவும். தண்ணீரால் கைகளை கழுவுவது மட்டும் போதாது. வெயில்நேரங்களில் வெளியே எதில் கைவைத்தாலும் சானிடைசரை பயன்படுத்துவது அவசியம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com