Published : 06,Sep 2017 01:17 PM

உரிமைக்குழு நோட்டீஸுக்கு எதிரான திமுக வழக்கு... நாளை விசாரணை

DMK-case-against-franchise-notices-----tomorrow-inquiry

சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

சட்டப்பேரவைக்குள் புகையிலைப் பொருட்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டிருந்த நிலையில், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பேரவைக்குள் எடுத்துவந்தனர். இது சட்டப்பேரவை மாண்புக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என ஆளும் அதிமுக குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவை உரிமை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், விளக்கமளிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டு திமுக உறுப்பினர்கள் நேற்று மனு கொடுத்தனர்.

இந்நிலையில் உரிமைக்குழு அனுப்பு நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்