Published : 15,Apr 2022 03:17 PM

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் - கொல்கத்தா மோதல்; வெல்லப்போவது யார்?

Who-will-win-Sunrisers-Hyderabad-vs-Kolkata-Knight-Riders-match

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே மைதானங்களில், 2022-ம் ஆண்டுக்கான, 15-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 24 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 61 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் லக்னோவிடம் 12 ரன் வித்தியாசத்திலும் தோல்வியுற்றது. அதைத்தொடர்ந்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி வெற்றிவாகை சூடியுள்ளது.

image

2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இதனால் ஹைதராபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது கேள்விக் குறியாகியுள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.

அந்த அணி, தனது தொடக்க ஆட்டத்தில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. பெங்களூரு அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது.

ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றியை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அணி 14 போட்டியிலும், ஹைதராபாத் அணி 7 அணியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் , ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜே சுசித் அல்லது ஸ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்