”வங்கிகளுக்கு செல்லாதவாறு தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம்": விவசாயத்துறை அமைச்சர்

”வங்கிகளுக்கு செல்லாதவாறு தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம்": விவசாயத்துறை அமைச்சர்
”வங்கிகளுக்கு செல்லாதவாறு தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம்": விவசாயத்துறை அமைச்சர்

"விவசாயிகள் கடன் பெறுவதற்கு வங்கிகளுக்கு செல்லாத அளவில் வரும் 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம்" என்று வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பதிலுரையில் பேசிய அமைச்சர், "40 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆட்சியில் கேரளாவில் இருந்து நியாவிலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்த டிகேஎம் நெல் ரகத்தை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், 150 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் பயன்படாமல் சீரழிந்துள்ளது.

கடந்த காலங்களில் கொடுக்கப்படாமல் இருந்த கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும்,  பத்து மாத ஆட்சியில் முழுவதுமாக கொடுத்துள்ளது|” என்று கூறினார். மேலும், வரும் 4 ஆண்டுகளில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு வங்கிகளுக்கு செல்லாத தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com