Published : 13,Apr 2022 08:32 AM
அமெரிக்கா: மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - ரத்தக் காட்சிகளாக மாறிய சுரங்க நிலையம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் சரமாரியாகச் சுட்டுள்ளார். கட்டடப் பணியில் ஈடுபடுவோர் அணியும் ஆரஞ்ச் நிற மேலாடையை அணிந்திருந்த அந்த நபர் முகக்கவசமும் அணிந்திருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தப்பி ஓடிய அவரைப் பிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்க ரயில் பாதையில் பலர் ரத்தக் காயத்துடன் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: 339 கிமீ வேகத்தில் காரை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி