339 கிமீ வேகத்தில் காரை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி

339 கிமீ வேகத்தில் காரை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி
339 கிமீ வேகத்தில் காரை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் பார்வையை இழந்த  ரேஸ் கார் ஓட்டுநர், தற்போது மணிக்கு 339 கிமீ வேகத்தில் காரை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் பார்வையை இழந்த ரேஸ் கார் ஓட்டுநர் டான் பார்க்கர், மார்ச் 31 அன்று அதிவேகமாக மணிக்கு 339.64 கிமீ வேகத்தில் காரினை ஓட்டி கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை வென்றுள்ளார். டான் பார்க்கர் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் ஓடுபாதையில் தனது கஸ்டமைஸ் செய்யப்பட்ட காரை மணிக்கு 339.64 கிமீ வேகத்தில் ஓட்டி, மணிக்கு 322.68 கிமீ வேகம் என்ற முந்தைய  உலக சாதனையை முறியடித்தார்.10 ஆண்டுகளுக்கு முன்பு இதே மார்ச் 31ஆம் தேதியில் நடந்த ஒரு பந்தய கார் விபத்தில் பார்க்கர் தனது பார்வையை இழந்தார். அதன்பின்னர் அவர் லூசியானா பார்வையற்றோருக்கான மையத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே மார்ச் 31ஆம் தேதியில்  பட்டமும் பெற்றார்.

பார்வையற்றவர்களின் தேசிய கூட்டமைப்பு மூலமாக ‘பார்வையற்ற ஓட்டுநர்களுக்கான சவால்’ எனும் போட்டியின் ஒரு பகுதியாக நடந்த உலக சாதனை முயற்சியின் போது, ஆடியோ வழிகாட்டுதல் அமைப்பைப் பயன்படுத்தி பார்க்கர் இந்த சாதனையை செய்தார்.இந்த சாதனை குறித்து பேசிய பார்க்கர், "ஒரு பார்வையற்ற நபர் ஒரு வாகனத்தை பாதுகாப்பாக இயக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்,  அதை மணிக்கு இருநூறு மைல் வேகத்தில் செய்ய முடியும் என்பதையும் நாங்கள் நிரூபித்துள்ளோம். இந்த வெற்றி பார்வையற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம், மேலும் சுய-ஓட்டுநர் கார்கள் போன்ற நவீன தொழில்நுட்பத்தின் திறனை உலகுக்குக் காண்பிக்கும், பார்வையற்றவர்களுக்கு அன்றாட இயக்கம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள தடைகளை உடைக்கவும் இது உதவும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com