Published : 12,Apr 2022 08:14 PM

‘உங்களைப் போல நானும் ஒரு ரசிகனா..‘ - ‘பீஸ்ட்‘ படத்திற்காக விஜயின் தந்தை வெளியிட்ட வீடியோ

Vijay-s-father-SA-Chandrasekhar-speaks-about-Beast-for-the-first-time

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், ‘பீஸ்ட்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்தப் படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 2 பாடல்களும் யூ-ட்யூப்பில் வெளியாகி சாதனைகள் புரிந்து வரும் நிலையில், கடந்த 2-ம் தேதி வெளியான படத்தின் ட்ரெயிலரும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒருவருடத்திற்குப் பிறகு விஜயின் படம் வெளியாக உள்ளநிலையில், படத்தை திருவிழாவாக கொண்டாட அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். படத்தின் புரமோஷனை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் விஜய்யை நேர்காணல் செய்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார், எஸ்.ஏ. சந்திரசேகர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விஜய், ‘தந்தைதான் ஒரு குடும்பத்தின் மரத்தில் வேர் மாதிரி. கடவுளுக்கும், தந்தைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கடவுளை நேரில் பார்க்க முடியாது. தந்தையை நேரில் பார்க்கலாம்’ என பதிலளித்திருந்தார். இந்த நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிப்பரப்பானது.

image

நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திசேகருக்கும் கருத்து வேறுபாடு நிலவிவருவதாக பலர் கூறிய சூழலில், விஜய்யின் இந்த பதில் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றதோடு, கருத்து வேறுபாடுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில், இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ‘பீஸ்ட்’ படத்தை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசமுள்ள பிள்ளைகளே வணக்கம். ‘பீஸ்ட்’ படத்தை காண்பதற்கு ஒரு ரசிகனாக உங்களைப் போலவே நானும் காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களது வெற்றி கொண்டாட்டத்திற்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

வீடியோவை இங்கே காணலாம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்