Published : 12,Apr 2022 04:47 PM

கரூரில் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதில் சிக்கல்! - காரணம் இதுதான்!

Problem-with-the-release-of-Beast-movie-in-Karur

கரூரில் முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ வரும் 13 ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. கரூரில் மூன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியான நிலையில், தற்போது வரை விநியோகஸ்தர்களிடம் கரூர் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கரூர் மாநகரில் ’பீஸ்ட்’ படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.அரவக்குறிச்சி மற்றும் குளித்தலையில் நாளை திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

image

’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப் பிறகு நெல்சனின் மூன்றாவது படம் ‘பீஸ்ட்’ என்பதால் ஹாட்ரிக் வெற்றி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்