ரோஹிங்யா இஸ்லாமியர் திரும்பி வரமுடியாதபடி, வங்கதேச எல்லையில் மியான்மர் ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக வங்கதேச அரசு மியான்மரிடம் அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவிக்க இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு ரோஹிங்யா இஸ்லாமியர் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை மியான்மர் ராணுவம் தொடங்கியது. இதில் 400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் எல்லையைக் கடந்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கின்றனர். தங்கள் நாட்டுக்குள் வருவோரை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு வங்கதேசம் திட்டமிட்டிருக்கிறது. இதைத் தடுக்கும் வகையிலேயே, கண்ணிவெடிகளை மியான்மர் புதைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ரோஹிங்யா இஸ்லாமியர் மீதான ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. பல்வேறு உடன்பாடுகளும் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி மியான்மரில் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!