ஐரோப்பாவின் ஒருநாள் கொள்முதல்தான் எங்கள் ஒருமாத கொள்முதல்- அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

ஐரோப்பாவின் ஒருநாள் கொள்முதல்தான் எங்கள் ஒருமாத கொள்முதல்- அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
ஐரோப்பாவின் ஒருநாள் கொள்முதல்தான் எங்கள் ஒருமாத கொள்முதல்- அமெரிக்காவுக்கு இந்தியா பதில்

ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளில் ஐரோப்பா வாங்கும் கச்சா எண்ணெயை விட இந்தியாவின் மாதாந்திர கொள்முதல் குறைவாகவே உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்க ஐக்கிய நாடுகள் இடையே 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உக்ரைன் நெருக்கடி, சுதந்திரமான, ஜனநாயக மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக், கோவிட் -19, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஆண்டனி ப்ளிங்கன், “எண்ணெய் கொள்முதல், பொருளாதாரத் தடைகள் மற்றும் பலவற்றைப் பொருத்தவரை, எரிசக்தி கொள்முதல் செய்வதற்கான வரைமுறைகள் உள்ளன என்பதை நான் கவனிக்கிறேன். நிச்சயமாக, ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எரிசக்தி பொருட்களை வாங்க வேண்டாம் என்று உலக நாடுகளை ஊக்குவிக்கிறோம் . ஒவ்வொரு நாடும் வித்தியாசமாக இருக்கிறது. வெவ்வேறு தேவைகள் உள்ளன, ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்தவே வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “நீங்கள் ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வாங்குவதைப் பார்க்கிறீர்கள் என்றால், முதலில் ஐரோப்பாவில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன், ஒருவேளை - நமது ஆற்றல் பாதுகாப்பிற்குத் தேவையான சில ஆற்றலை நாங்கள் வாங்குகிறோம், ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது நான் சந்தேகிக்கிறேனன். ஒரு மாதத்திற்கு எங்கள் மொத்த கொள்முதல் ஐரோப்பா ஒரு நாளில் வாங்குவதை விட குறைவாக இருக்கும்” என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com