வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள இர்மா புயல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் தீவு பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் தாக்கும்போது மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு லீவார்டு தீவுகளுக்கும், கிழக்கு போர்டோரிக்காவுக்கும் இடையே இர்மா புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட ஹார்வீ புயல் மற்றும் வெள்ளத்தால் 12 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் இன்னும் விலகாத நிலையில் தற்போது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!