வெளிநாட்டு டானாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை அவரே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுல், விஜய் சேதுபதியை வைத்து இப்போது ‘ஜங்கா’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஸ்டைலிஷான ஃபாரின் டானாக நடிக்கப் போகிறார். இதில் ‘வனமகன்’ சயிஷா ஜோடியாக நடிக்கிறார்.
கோகுலிடம் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொன்ன விஜய் சேதுபதி, பட்ஜெட்டைக் கேட்டதும், ‘நானே தயாரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம், பட்ஜெட் தொகை 20 கோடி ரூபாய் என்பதாம். இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதி நடித்ததில்லை என்பதால், மற்ற தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க வைக்க வேண்டாம் என நினைத்து தானே தயாரிக்கிறாராம். இந்த நல்ல மனசு யாருக்கு வரும்? என்பதுதான் கோடம்பாக்கத்தின் பேச்சாக இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பிரான்ஸில் 60 சதவீதமும், சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 40 சதவீதமும் நடைபெற உள்ளது.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?