கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்து உரையாற்றியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில், ஏபரல் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு கண்ணூர் சென்றார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் எனும் தலைப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின், மலையாள மொழியில் பேசியவாறு தனது உரையை தொடங்கினார்.
ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு குறித்து பேசும் உரிமை தமிழ்நாடு, கேரளாவுக்கு அதிகம் உள்ளதாகவும், இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை அதிகாரம் இல்லையென்று குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆனால் ஒன்றிய அரசு, கிராமங்களில் உள்ள அதிகாரங்களை கூட கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது, “இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள், பொதுவுடைமை புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கண்ணூர். பல்வேறு செயல்பாடுகளுக்காக விருதுகளை பெற்று விருதுகளின் முதலமைச்சராக பினராயி உள்ளார். சிபிஎம் மாநாட்டில் ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அதிகார வரம்புகளை கடந்து, தனது அதிகாரத்தை விரித்து செல்கிறது ஒன்றிய அரசு. மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. மூலம் மாநில அரசுகளின் வருவாய் பறிக்கப்பட்டது. மாநிலங்களின் பிரச்னைகளை முறையிடும் திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக்குழுவை மத்திய அரசு கலைத்துவிட்டது. விவாதம் இன்றி சட்டம் நிறைவேற்றுகிறார்கள். நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எல்லா சட்டங்களையும் மத்திய அரசே முடிவு செய்கிறது. 8 கோடி மக்களை விட ஆளுநருக்கு அதிகாரமா?. பெரும்பான்மையோடு வென்ற அரசு இருக்கும் போது, ஆளுநரை வைத்து ஆட்சியை நடத்த முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மசோதாக்களை கிடப்பில் போடுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரான நானும், கேரள முதலமைச்சரும் தலையாட்டி பொம்மையாக இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து போராட வேண்டும்.
மாநிலங்களின் உரிமைக்காக போராட முதலில் தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து உரிமைகளுக்காக போராட வேண்டியது அவசியம். இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
அரசியல் மன கசப்புகளை விடுத்து, அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகத்தை நிலைநிறுத்த கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்