
மகாராஷ்டிராவில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, நெரிசலில் சிக்கி 11பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்ரா மாநிலத்தில் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தின்போது, புனே, அவுரங்கபாத் உள்ளிட்ட இடங்களில் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாராஷ்ட்ராவில் நீர் நிலைகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சிலைகள் பெருமளவில் கரைக்கப்பட்டன. குறிப்பாக, நாக்பூரில் உள்ள ஃபுதாலா ஏரியில் மிதக்கும் சிலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நகராட்சி ஊழியர்களும் அகற்றி வருகிறார்கள்.