Published : 07,Apr 2022 09:19 PM

கேரளாவில் முதல்நாளில் இத்தனை சிறப்பு காட்சிகளா..! - ‘பிகிலை’ முந்தி மாஸ் காட்டும் ‘பீஸ்ட்’

Vijay-starrer-Beast-gets-record-breaking-fan-shows-in-Kerala

கேரளாவில் நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்திற்கு, திரையரங்குகளில் அதிகளவிலான சிறப்புக் காட்சிக்கு (FDFS) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், கூடுதலான சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ‘மாஸ்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசைமையத்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வருகிற ஏப்ரல் 13-ம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்தும் வெளியிடப்படுகிறது. இதில், இந்தியில் மட்டும் ‘ரா’ (RAW) என்ற பெயரில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெயிலர் வரை அனைத்தும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

படம் வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் ‘பீஸ்ட்’ படத்திற்கு அதிகளவிலான சிறப்பு காட்சிகளுக்கு (FDFS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கான இணையான ரசிகர்கள், நடிகர் விஜய்-க்கும் உண்டு. இதனால், அவரது படங்கள் அங்கு நல்ல வசூலை பெற்று தரும். இதனால், நடிகர் விஜயின் படங்களுக்கு தனி மவுசு உண்டு.

image

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் பான் இந்திய படமான ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’-க்கு மத்தியிலும், ‘பீஸ்ட்’ படத்தை கேரளாவில் முதல்நாளில், அதிகமான திரையரங்குகளில் வெளியிட விநியோகஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, விஜயின் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் உருவான ‘பிகில்’ படம், அதிகாலையில் 307 சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டநிலையில், அதனை முறியடித்து ‘பீஸ்ட்’ திரைப்படம் 350 சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட உள்ளது.

மேலும், ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னணி நடிகரான மோகன்லாலின் ‘மரக்கர்’, ‘ஒடியன்’ படங்களுக்குப் பிறகு, 3-வதாக ‘பீஸ்ட்’ படத்திற்கு தான் அதிகளவில் கேரளாவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் விநியோகிஸ்தர்கள் கூடுதலாக காட்சிகளை வெளியிட உள்ளனர்.

வார நாட்களில் வெளியானலும், ‘பீஸ்ட்’ படம் மிகப் பெரும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழ், இந்தியை தொடர்ந்து மலையாளம், கன்னடத்திலும் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மாஸாக கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்