Published : 07,Apr 2022 08:46 AM

ஐபிஎல் 2022: லக்னோ அதிரடியை சமாளிக்குமா டெல்லி? - இன்று பலப்பரீட்சை

Who-Will-Win-Today-IPL-Match-Between-Lucknow-Super-Giants-and-Delhi-Capitals-IPL-2022

'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 15-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக இடம் பிடித்துள்ள கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது. முந்தைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிரான ஆட்டத்தில் கேப்டன் கே.எல். ராகுல், தீபக் ஹூடாவின் அரை சதமும், கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகள்  வீழ்த்தியதும் வெற்றிக்கு வழிவகுத்தது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 211 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தினர். தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லியை சந்திக்கிறது லக்னோ அணி.

image

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலா ஒரு வெற்றி தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-ம் இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த டெல்லி அணி அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தனிமைப்படுத்துதலை முடித்துவிட்டு பயிற்சிக்கு திரும்பியுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர், லக்னோ அணியுடனான இன்றைய போட்டியில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அதே போல் உடல்தகுதி தேர்வை முடித்துவிட்டு வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ஜேவும் இன்றைய ஆட்டத்தில் விளையாட தயாராக இருக்கிறார். இவர்களது வருகை டெல்லி அணிக்கு மேலும் வலுச்சேர்க்கும்.

image

மும்பையில் இரவில் நிலவும் பனியின் தாக்கம் காரணமாக பெரும்பாலும் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால், இந்த ஆட்டத்திலும் ‘டாஸ் ’ முக்கிய பங்கு வகிக்கும். 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த ஆட்டத் தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் இருக்கின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதையும் படிக்க: பவுண்டரிகளை விட சிக்ஸர்களே அதிகம் - பேட் கம்மின்ஸின் சாதனைப் பயணம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்