"நடிகர் விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு" - வைரலாகும் புகைப்படங்கள்

"நடிகர் விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு" - வைரலாகும் புகைப்படங்கள்
"நடிகர் விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு" - வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல தயாரிப்பாளரான கல்பாத்தி எஸ் அகோரத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜயும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வரும் 13-ம் தேதி இந்தப் படம் திரையரங்கு முழுவதும் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 2 பாடல்களும் யூ-ட்யூப்பில் வெளியாகி சாதனைகள் புரிந்து வரும் நிலையில், கடந்த 2-ம் தேதி வெளியான படத்தின் ட்ரெயிலரும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ‘விஜய் 66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தில் ராஜு தயாரிக்க, தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார்.

இசையமைப்பாளர் தமன் இசையில் இப்படம் உருவாகிறது. படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம் மகள் ஜஸ்வர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் பரஸ்பரம் கைகொடுத்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி வரைலாகி வருகின்றன.

திருமணத்தில் குவிந்த நட்சத்திரங்கள்:

ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி அகோரம் மகள் ஜஸ்வர்யா - பிரபல தொழில் அதிபரின் மகனுமான ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். தென் இந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர்கள் ஆர்.பி சௌத்திரி, ஏல்.அழகப்பன், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் சதீஷ் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

நடிகர் விஜய் - முதல்வர் சந்திப்பு :கைதட்டி வரவேற்ற விருந்தினர்கள்

நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதற்காக மேடைக்கு வந்த போது முதல்வர் மு க ஸ்டாலின் திருமண அரங்கிற்குள் வந்தார். மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் ஒரு நிமிடங்கள் சந்தித்து பரஸ்பரம் கை கொடுத்து கொண்டனர். பின்னர், முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பற்றனர். நடிகர் விஜய் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் திருமண மண்டபத்தில் சந்தித்தபோது அங்கிருந்த அனைவரும் கைதட்டினர்.

பின்னர் நடிகர் விஜயிடம் சிலர் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். வணக்கம் கூறியவாரே தனியார் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய். பின்னர் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்திய பின்னர் திருமண மண்டபத்தை விட்டு சென்றனர். அதன் பின்னர் சிவகார்த்திகேயன், நடிகர் சதீஷ் ஆகியோர் வந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com