Published : 05,Sep 2017 04:54 PM

மருத்துவக்கனவு கலைந்தது அனிதாவுக்கு மட்டுமல்ல

Nellai-girl-Christi-Pradeepa-also-did-not-get-MBBS-because-of-NEET

தமிழகத்தின் பல மாணவ மாணவிகளுக்குக் நீட் தேர்வால் மருத்துவக் கனவு கலைந்து போயிருக்கிறது.

கிறிஸ்டி பிரதீபா, நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி புதூரை சேர்ந்தவர். தாய் பீடி சுற்றும் தொழிலாளி, தந்தை வாடகை வாகனம் ஓட்டுபவர். ஏழ்மையான குடும்பப் பின்னணியில் படித்த கிறிஸ்டி பிரதீபா,‌ தனியார் நிதி உதவியுடன் நாமக்கல்லில் உள்ள பள்ளியொன்றில் பிளஸ் டூ படித்து, 1176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாநில பாடத்திட்டத்தில் படித்த இவரால் நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்வியில் சேர முடியாத நிலையில் இருக்கிறார் கிறிஸ்டி பிரதீபா.

மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் எழுதிய தங்களைப் போன்றவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரும் மாணவி கிறிஸ்டி பிரதீபாவும், அவரது தாயாரும் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இனிவரும் காலங்களில் பாடத்திட்டத்தை மாற்றி, நீட்டுக்கான பயிற்சியையும் அரசு அளிக்க வேண்டும் என்பதே கிறிஸ்டி பிரதீபா போன்ற மாணவிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்