Published : 06,Apr 2022 05:05 PM
ஆன்லைனில் பணத்தை இழந்த பட்டதாரிகள்... பத்திரமாக மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்

வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் பணத்தை இழந்த இளைஞர்களின் பணம் 2,88,000 ரூபாயை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவர்களிடமே ஒப்படைத்துள்ளனர்.
சேலத்தில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பத்ரிநாராயணன் என்னும் வேலை தேடும் பட்டதாரியொருவர், ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ரூ. 1,98,000 தொகையை செலுத்தி ஏமாந்துள்ளார். அதேபோல் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மரைன் என்ஜினீயரொருவரும், போலி முகநூல் பக்கத்தால் ரூ. 90,000 இழந்துள்ளார்.
இது தொடர்பாக இவர்கள் இருவருமே வேலூர் சைபர் கிரைம் போலீசாரிடம் தனித்தனியே புகார் அளித்திருக்கின்றனர். சைபர் கிரைம் போலீசாரின் தீவிர முயற்சியை தொடர்ந்து, இழந்த பணம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணத்தை அவர்கள் இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.
சமீபத்திய செய்தி: இரட்டைஇலை சின்னம் விவகாரம்: அலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து வழக்கறிஞர் சோக முடிவு?