Published : 03,Apr 2022 11:06 AM

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

MK-Stalin-Birthday-greetings-to-Governor-of-Tamil-Nadu-RN-Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது  71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைத்தள பதிவு மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அமைதி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துக்கள'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது புகார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்