[X] Close

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு

Terrorist-killed-in-encounter-in-Kashmir

காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல், காஷ்மீரின் சம்பா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். கையெறி வெடிகுண்டுகளை வீசியும், தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் பயங்கரவாதிகள் செய்வதறியாது திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திக் கொண்டே காஷ்மீருக்குள் ஊடுருவும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. மோதலில் இந்தியா தரப்பில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றி எந்தத் தகவலும் வெளிவரவில்லை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close