பங்களாதேஷில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ்சில் கல்வீசி தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி 2015-ம் ஆண்டு பங்களாதேஷில் கிரிக்கெட் விளையாட ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி அங்கு விளையாடுவதை தவிர்த்து வந்தது. பலத்த பாதுகாப்புக்கு, பங்களாதேஷ் உறுதியளித்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணி இப்போது அங்கு சென்று விளையாடி வருகிறது.
இந்த அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு பேரூந்தில் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு திரும்பினர். அப்போது பஸ்சில் ஒரு கல் வந்து விழுந்தது. இதில் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. ஆனால் யாருக்கும் காயமில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ‘வீரர்கள் சென்ற பஸ்சில் சிறிய கல் விழுந்து கண்ணாடி உடைந்துள்ளது. இதையடுத்து வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. பங்களாதேஷ் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் செல்லும் வழியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்துவருவதாகவும் அதில் இருந்து கல் ஏதாவது விழுந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?