Published : 01,Apr 2022 07:39 AM

ஐபிஎல் 2022: மலிங்கா சாதனையை முறியடித்த பிரோவா

Chennai-Super-Kings-Dwayne-Prova-has-surpassed-Lasith-Malinga-s-record-for-most-wickets-in-IPL-cricket-history

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய லசித் மலிங்காவின் சாதனையை, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் பிரோவா முறியடித்தார்.

விக்கெட்டை வீழ்த்தியப் பிறகு தனக்கே உரிய பாணியில் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் டுவைன் பிராவோவின் செயல், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி பலராலும் ரசிக்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ, நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனையை படைத்தார்.

image

122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தில் இருந்த இலங்கை வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவருமான யார்க்கர் நாயகன் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்தார் பிராவோ. 153 ஐபிஎல் போட்டிகளில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், 1538 ரன்களையும் குவித்திருக்கிறார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஐந்து இடங்களில் பிராவோ, மலிங்காவை தவிர, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும், பியூஷ் சாவ்லா 157 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்திலும், ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்பது மட்டுமன்றி, அனைத்துவிதமான இருபது ஓவர் போட்டிகளில் இதுவரை 524 போட்டிகளில் விளையாடி 575 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறார் பிராவோ. தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர் 451 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2004ஆம் ஆண்டு அறிமுகமானார் பிரோவோ. 2008 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வரும் அவர், 2011ஆம் ஆண்டில் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார். 2008 முதல் 2010 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, சிஎஸ்கே அணி இரண்டு வருடங்கள் தடைபெற்ற காலத்தில் 2016, 2017ஆம் ஆண்டில் குஜராத் டைடன்ஸ் அணியில் இடம் பெற்றார். அதன்பிறகு சிஎஸ்கே அணியிலேயே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 2013, 2015ஆம் ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை வென்றுள்ளார் பிராவோ.

இதையும் படிக்க: அடுத்த சாதனையை அரங்கேற்ற காத்திருக்கும் தோனி - டி20 போட்டிகளில் 7000 ரன்களை குவிப்பு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்